Restrictions to be Followed in Schools from 3rd January 2022

கோவிட்-19 பரவல் காரணமாக ஜனவரி 10ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் , ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு ஆன்லைன் வழி கல்வியை தொடர தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கல்வி நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று தமிழக அரசு வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் இயங்குவது குறித்த கட்டுப்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.முருகேஷ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

பள்ளிகள் இயங்குவது குறித்து பின்வரும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

  • அனைத்துப்பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 10.01.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிகளுக்கு வரவேண்டும். அவர்களுக்கான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.
  • மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG,UKG) செயல்பட அனுமதியில்லை.
  • 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டும் கொண்டு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
  • இல்லம் தேடி கல்வி திட்டம் வழங்கம்போல் குழந்தைகளின் இருப்பிடங்களுக்கே சென்று வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும். அரசின் கோவிட் நிலையான வழிகாட்டு நெறிமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முககவசம் அணிதல் சோப்பு கொண்டு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை அனைத்து பள்ளிகளுக்கும் தவறாமல் கடைபிடிக்க தக்க அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேற்கண்ட நெறிமுறைகளை பின்பற்றாத பள்ளிக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிட்டிருந்தது

To Download The Official Press Release Regarding the Restrictions to be followed in schools form January 3rd 2022, Click the below Download Button and get the Press Release.


One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *