You are currently viewing தமிழகத்தில் காலாண்டு தேர்வு அட்டவணை என்ற தகவல் தவறானது !

தமிழகத்தில் காலாண்டு தேர்வு அட்டவணை என்ற தகவல் தவறானது !

தற்போது இணையதளத்தில் பரவி வரும் அட்டவணையானது புதுச்சேரி அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அட்டவணை தமிழ்நாட்டிற்கு இன்னும் எந்த நாளில் எந்த பாடத்திற்கான தேர்வு நடைபெறும் என்ற அட்டவணை வெளியிடப்படவில்லை இந்த பதிவை பகிர்ந்து ஆசிரியர்களை தெளிவுபடுத்தவும் ! மாணவர்களை தெளிவுபடுத்தும் நாமே இப்படி குழப்பலாமா ?

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மே 2022 இல் வெளியிடப்பட்ட கல்வி ஆண்டு நாள்காட்டி படி 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23ஆம் தேதி முதல் காலாண்டு தேர்வு தொடங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோன்று 1 முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இணையதளங்களில் பரவி வரும் காலாண்டு தேர்வு அட்டவணை அதாவது இந்த நாளில் இந்த பாடத்திற்கான தேர்வு நடைபெறும் என்ற அட்டவணையானது புதுச்சேரி அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அட்டவணை தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்த நாளில் இந்த பாடத்திற்கான தேர்வு நடைபெறும் என்ற அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.

Leave a Reply